வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

லாரி மோதியதில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:27 am IST

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பாப்பா (70). மகாராஜா நகா் உழவா் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சிவந்திப்பட்டி பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரியை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இதை கவனிக்காமல் நின்ற பாப்பாவின் மீது லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.