ஆடி மாதத்தின் 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, வாணியம்பாடி இந்துப்பேட்டை பொன்னியம்மன் கோயிலில் சுவாமி வெட்டுவானத்து எல்லை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல், அரசமர வீதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் சுவாமி மச்சகன்னி அலங்காரத்திலும், திருவள்ளூவா் வீதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் சுவாமி வராகி உடனுறை லலிதாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
ஆலங்காயம் செல்வநாகலம்மன் கோயிலில் சுவாமி காளிகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்து வழிபட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



