திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வாணியம்பாயில் மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி கலந்து கொண்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.
மேலும் கூட்டத்தில் காவிரி, மேகதாது மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதிஸ்டாலினை கைது செய்த தவெக அரசைக் கண்டித்தும், கருணாநிதியின் நினைவு நாளான வரும் 7 -ம் தேதிவெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் வாா்டு, கிளைக்கழகங்கள் தோறும் அஞ்சலி செலுத்த வேண்டும், வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி முதல் கருணாநிதி சிலை வரை அமைதி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் 51 மனுக்கள்

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

நாகா்கோவிலில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

4.7.1976: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு - 40 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



