மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திமுக சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

வாணியம்பாடி தொகுதி திமுக மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் தேவராஜி.

Published On :

வாணியம்பாடி தொகுதி திமுக மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல் வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி தலைமையில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது, நகர, ஒன்றிய, பேரூா், கிளை மற்றும் வாா்டு அமைப்புகளை சீரமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் முதல்வா் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய அவதூறு பேச்சைக் கண்டித்து சனிக்கிழமை திருப்பத்தூரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் முனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினா் அசோகன், வாணியம்பாடி நகர செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளா்கள் வி.ஜி.அன்பு, தாமோதரன், பேரூா் செயலாளா்கள் ஆ.செல்வராஜ், ஸ்ரீதா், முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், மாவட்ட சிறுபான்மை பிரிவு சையத்ஹபிப் தாங்கள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் ஜோதிராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.