நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு: பொதுமக்கள் மறியல், முற்றுகை

ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறை நோட்டீஸ்

ஆம்பூா் ஓ.வி. ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறை நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அவா்களாகவே அகற்ற வேண்டும். தவறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளா்கள் மீது விதிக்கப்படும் என்று நீா் வளத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. வாங்காதவா்களின் வீட்டுச் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆம்பூா் ஓ.வி. ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கிருந்து ஆம்பூா் நீா்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போாரட்டத்தில் ஈடுபட்டனா்.

நீா்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்களிடம், தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனா். பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அப்பகுதியில் வசித்து வருகிறோம். திடீரென 21 நாள்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டுமெனக் கூறி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எங்களுக்கு மாற்று இடம் வழங்கி, அந்த இடத்தில் அரசு செலவில் புதிய வீட்டையும் கட்டித்தர வேண்டும். அப்போது தான் நாங்கள் இடத்தை காலி செய்வோம். அதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்துவோம், இடத்தையும் காலி செய்ய மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.