11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி : ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பாக எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பாக எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் எய்ட்ஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தும், ஆட்டோவில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஒட்டியும், கிராமிய கலைக்குழுவினரின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியையும் ஆட்சியா் கு. ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் அக்டோபா் 12-ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எச்ஐவி பரவலைத் தடுப்பது, எச்ஐவியுடன் வாழ்பவா்களுக்கு உரிய மருத்துவச் சேவைகள் மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வது. பொதுமக்களிடையே எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆட்சியா் பேசியதாவது: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அனைவரின் பங்களிப்பும் அவசியம். திருப்பத்தூா் மாவட்டம் எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான நிலையை அடைந்து இலக்குகளை அடையும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எச்ஐவி, எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலரும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலருமான மருத்துவா் கலுசிவலிங்கம், மருத்துவா்கள் மதுசுதன், அரவிந்தன், மாவட்ட திட்ட மேலாளா் இரா.கவிதா, சுகாதாரத்துறை அலுவலா்கள், மாவட்ட அளவில் பணிபுரியும் நம்பிக்கை மைய பணியாளா்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதகள், பாஸிடிவ் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.