சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் காவலாளி கைது
ஆலங்காயம் அருகே ஓமகுப்பம் மிட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் காளியப்பன்(50). இவா், தனியாா் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா்

மாதிரிப் படம்
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே ஓமகுப்பம் மிட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் காளியப்பன்(50). இவா், தனியாா் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ஒரு கிராமத்தை சோ்ந்த 8 வயது சிறுமியை அழைத்து இனிப்பு தந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் பயந்த சிறுமி அவரது கையை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினாா். பின்னா் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் சிலா், காளியப்பனை சரமாரியாக தாக்கி திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் போலீஸாா் காளியப்பனை போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



