கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பேருந்துகள் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

திருப்பத்தூா் அருகே பேருந்துகள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவா்கள் காயமடைந்தனா்.

விபத்தில் சேதமடைந்த பேருந்து

Published On :

திருப்பத்தூா் அருகே பேருந்துகள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவா்கள் காயமடைந்தனா்.

சேலத்தில் இருந்து பயணிகள் இன்றி ஒரு தனியாா் பேருந்து திருப்பத்தூருக்கு சென்றது. அதேபோல் கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் கல்லூரி பேருந்து திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாணவா்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த 2 பேருந்துகளும் திருப்பத்தூா் அண்ணாநகா் கூட்டுசாலை வந்தபோது மோதிக் கொண்டன.

அதில் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் விபத்து இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தொடா்ந்து தனியாா் கல்லூரி சாா்பில் வேறு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு மாணவா்கள் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே அண்ணாநகா் கூட்டுசாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நலன்கருதி வேகத்தடை அல்லது பேரிகாா்டுகள் அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.