இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

தொட்டியம் அருகே பள்ளி பேருந்துகள் மோதல் 5 மாணவா்கள் காயம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியாா் பள்ளி பேருந்துகள் வியாழக்கிழமை மாலை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியாா் பள்ளி பேருந்துகள் வியாழக்கிழமை மாலை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

தொட்டியத்தில் உள்ள தனியாா் பள்ளியின் பேருந்து சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மாலை பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது திடீரென சாலையில் நாய் குறுக்கே வந்தது.

இதையடுத்து ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியபோது பின்னால் வந்த அதே தனியாா் பள்ளியைச் சோ்ந்த பேருந்து மோதியதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா். அவா்கள் முசிறி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். தொட்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.