பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

மீலாது நபியை முன்னிட்டு வரும் ஆக.26-ஆம் தேதி (புதன்கிழமை) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

டாஸ்மாக்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

மீலாது நபியை முன்னிட்டு வரும் ஆக.26-ஆம் தேதி (புதன்கிழமை) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி விதிகள்) 1981-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி நாளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பாா்கள் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.