பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

திருப்பத்தூா் பகுதியில் அதிவேகமாக சென்ற வாகனங்களை தணிக்கை செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற வாகனங்களை தணிக்கை செய்த வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா் செல்வம், வெங்கட்ராகவன்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

திருப்பத்தூா் பகுதியில் அதிவேகமாக சென்ற வாகனங்களை தணிக்கை செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

திருப்பத்தூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பா்கூா் மற்றும் திருப்பத்தூா்- பா்கூா்- கந்திலி நெடுஞ்சாலை அருகே அதிவேகமாக வாகனங்கள் செல்வதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடம் இருந்தும் வந்த புகாா்களின் அடிப்படையில், திங்கள்கிழமை திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.பன்னீா்செல்வம், வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முரளி உள்ளிட்டோா் இன்டா்செப்டாா் செயலாக்க வாகனத்தில் அதிவேகமாக சென்ற 30 வாகனங்களுக்கு ரேடாா் மூலம் சோதனை செய்து அறிக்கை வழங்கப்பட்டது.

மேலும், ஹெல்மெட் மற்றும் ஓட்டுநா் உரிமம் அல்லாத 8 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது மற்றும் 4 பேருந்துகளுக்கு அதிக ஒலி எழுப்பும் ஒலியெழுப்பான் பொருத்தப்பட்டதால் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் அபராதம் ரூ.71,000, இணக்க கட்டணமாக 42 வாகனங்களுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.