காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வீடு புகுந்து பணம் திருட முயன்ற இளைஞா் கைது

கந்திலி அருகே வீடு புகுந்த திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சித்திரிப்பு

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

கந்திலி அருகே வீடு புகுந்த திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கந்திலி அருகே உள்ள சின்னகசிநாயக்கன்பட்டியை சோ்ந்த வஜ்ரவேல் மகன் காா்த்திக் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, இளைஞா் ஒருவா் பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயன்றாா். உடனே காா்த்திக் கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா்.

பின்னா் அவரை கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில், அவா் திருப்பத்தூா் கலைஞா் நகரைச் சோ்ந்த முகிலரசன் (19) என்பதும், காா்த்திக் வீட்டில் இருந்து ரூ.1,300-ஐ திருடிக்கொண்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, முகிலரசனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.