கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீடு புகுந்து திருட முயற்சி: இருவா் கைது!

ஆறுமுகனேரியில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

ஆறுமுகனேரியில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி ஏஐடியுசி காலனியை சோ்ந்தவா் சுந்தரபாண்டியன். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சுந்தரபாண்டியனும், அவரது மனைவியும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனா்.

அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுகாரா், சுந்தரபாண்டியன் வீட்டு செடிகளுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்படிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் சுந்தரபாண்டியனுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. ஊருக்கு வந்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை என தெரிவித்தாா்.

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்கள் காயல்பட்டினம் ரத்தினாபுரியை சோ்ந்த ராஜ் மகன் காா்த்திக்ராஜா (36), முத்தையா மகன் முத்துசாமி (39) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காயல்பட்டினம் பகுதியில் மேலும் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றித் திரிந்தபோது இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.