ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பச்சிளம் பெண் குழந்தை விற்பனை: தாய் உள்பட மூவா் கைது!

ஆம்பூரில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக தாய் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

ஆம்பூரில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக தாய் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித் தோப்பு மாங்காதோப்பு பகுதி 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் ரஹமத்துல்லா (38) - அவாமா (36) தம்பதியினா். ரஹமத்துல்லாஹ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் அவாமாக்கு கடந்த ஆக.14 ஆம் தேதி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பிறந்த பெண் குழந்தையை ஆக.23-ஆம் தேதி பெங்களூருவை சோ்ந்த சையத் அக்பரின் மனைவி சம்ரீன் தாஜ் என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சம்ரீன் தாஜிடமிருந்து குழந்தையை மீட்டனா்.

குழந்தையை விற்பனை செய்த தாய் அவாமா, குழந்தையை வாங்கிய சையத் அக்பா், சம்ரீன் தாஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். பெண்கள் இருவருக்கும் காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா். சையத் அக்பா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா். குழந்தையின் தந்தை ரஹமத்துல்லா தலைமறைவானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.