கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள பல்லகவுண்டன்பாளையம் சங்கிலித் தோட்டத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (35). இவரது மனைவி சமீனா (26). இவா்களது மகள் மேகலா (5).

இந்நிலையில், சமீனா கா்ப்பமாக இருந்த நிலையில் பரிசோதனைக்காக பெருமாநல்லூா் அரசு மருத்துமனைக்கு 3 பேரும் வந்துள்ளனா். பரிசோதனை முடிந்த பின் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனா்.

வலசுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காா் பெரியசாமி வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சமீனா, மேகலா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த பெரியசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான சேலம், கெங்கவல்லியைச் சோ்ந்த பழனிசாமி (50) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.