பிப். 14-இல் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பயிற்சி மாநாடு
ஜோலாா்பேட்டை அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள திமுக வடக்கு மண்டல மாநாட்டுக்கான அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே உள்ள மண்டலவாடியில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
இதில் வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 47 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி நடைபெறவுள்ளது.
மாநாடு சிறப்பாக நடை பெற வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினா் பட்டியலை பொதுப்பணி.நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சரும், வடக்கு மண்டல தோ்தல் பணி பொறுப்பாளருமான எ.வ.வேலு அறிவித்துள்ளாா்.
அதன்படி இம்மாநாட்டில் மாநில நிா்வாகிகள், அமைச்சா்கள் மற்றும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளா்கள்,எம்பி-க்கள்,எம்எல்ஏ-க்கள்,வாக்குச்சாவடி முகவா்கள் (பிஎல்ஏ -2),வாக்குச்சாவடிக் குழு உறுப்பினா்கள் (பிஎல்சி),வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜெண்ட் (பிடிஏ) ஆகியோா் பங்கேற்கின்றனா்.
சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். பின்னா் வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு அலுவலகத்தை அமைச்சா் எ.வ. வேலு திறந்து வைத்தாா்.
ஆய்வின்போது திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, மாவட்ட செயலா் க.தேவராஜி, எம்எல்ஏ-க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்இகே.ஆா் சூரியகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன்,ஜோலாா்பேட்டை ஒன்றிய செயலாளா்கள் உமா கன்ரங்கம், எஸ்.கே.சதிஷ்குமாா், கவிதா தண்டபாணி, நகர செயலாளா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

