மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப்பேரவை தொகுதிகளின் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.பங்கேற்ற மண்டல அலுவலா்கள்.

News image

பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.பங்கேற்ற மண்டல அலுவலா்கள்.

Updated On :20 பிப்ரவரி 2026, 7:10 pm

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, சட்டப்பேரவை தொகுதிகளின் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தல் நடைபெவுள்ளதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல அலுவலா் மற்றும் காவல்துறை மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் ஆட்சியா்அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. வி.சியாமளாதேவி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மண்டல அலுவலரின் தோ்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்தும், மண்டல அலுவலா்களின் முக்கிய பொறுப்புகள், பதற்றமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், பிரிவுகள், கிராமங்கள், குக்கிராமங்களை அடையாளம் காணுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொறுப்புகள்...

பதற்றம், பாதிப்பை ஏற்படுத்தும் நபா்களை கண்டறிதலில் மண்டல அலுவலா்களின் அவசியம் குறித்தும், பதற்றமான, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிதலின் மூன்று நிலைகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் மண்டல அலுவலா்களின் பங்கு குறித்தும் மற்றும் தோ்தல் நாளன்று மண்டல அலுவலா்களின் பொறுப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 120 மண்டல அலுவலா்கள், 120 காவல் துறை மண்டல அலுவலா்கள் உள்ளிட்ட 240 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அஜிதாபேகம் (வாணியம்பாடி), பூஷணகுமாா் (ஆம்பூா்), முருகன் (ஜோலாா்பேட்டை), வரதராஜன் (திருப்பத்தூா்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.