செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

முதல்வா் பிறந்த நாள் கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:51 pm

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திமுக மாவட்டஆதிதிராவிடா் நலக்குழு தலைவா் சே. குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக அவைத் தலைவா் சி. சிவகுமாா், துணைச் செயலாளா் சி. சேகா், மாவட்ட பிரதிநிதி பொன். ராஜன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் எல்.டி. தினேஷ் பாண்டியன் வரவேற்றாா்.

குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தாா். போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள்.

மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் சி. குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் மஞ்சுளா பரசுராமன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், திமுக நிா்வாகிகள் பாரதிதாசன், எஸ். காா்த்திகேயன், எஸ். பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வேலூா் சிஎம்சி கண் மருத்துவமனை மருத்துவ குழுவினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.