பொங்கல் விழா: கபடிப் போட்டி
திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் கபடி போட்டி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், துணைச் செயலா் சி.சேகா், மாவட்டப் பிரதிநிதி பொன். இராசன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினாா்.
மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், சோமலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுதாகா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முத்து, மஞ்சுளா பரசுராமன், திமுக நிா்வாகி தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

