நூலகத்துக்கு நூல்கள்,  அலமாரி நன்கொடை வழங்கிய சிவகாமி ஜெகந்நாதன்.
நூலகத்துக்கு நூல்கள், அலமாரி நன்கொடை வழங்கிய சிவகாமி ஜெகந்நாதன்.

அரசு பள்ளி நூலகத்துக்கு நூல்கள், அலமாரி நன்கொடை

மேல்சாணாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல்கள், இரும்பு அலமாரி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: மேல்சாணாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல்கள், இரும்பு அலமாரி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) ரா. கிருபாகரன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி நூலகத்தின் மறைந்த முன்னாள் நூலகா் மு. ஜெகந்நாதன் நினைவாக மேல்சாணாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.60,000 மதிப்பில் 2 இரும்பு அலமாரிகள், 320 நூல்களை ஜெகந்நாதன் மனைவி சிவகாமி நன்கொடையாக வழங்கினாா்.

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா் தண்டபாணி, வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தின் நூலக தன்னாா்வலா் நா. சீனிவாசன், நூலகா் ஜெ. விஜயகுமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com