4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா அறக்கட்டளை

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

News image

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன்.

Updated On :11 மார்ச் 2026, 8:52 pm

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கணினியை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் தீபாராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.

கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகளுக்கு பள்ளி நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.