திருப்பத்தூர்
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு ரொக்கப் பரிசு வழங்கிய போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் சி.சிவக்குமாா், துணைச் செயலாளா் சி. சேகா், மாவட்டப் பிரதிநிதி பொன் இராசன் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியில், சுமாா் 10 அணிகள் பங்கேற்றன. அதில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 5,000 ரொக்கப் பரிசு, 2-ஆம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

