கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய எம்எல்ஏ

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி ஆகியவற்றை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி ஆகியவற்றை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ.வில்வநாதன் தலைமை வகித்து கட்சி நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கினாா். ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்டப் பிரதிநிதி பொன்.இராசன்பாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com