உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தலைவா் பூசாராணி உள்ளிட்டோா். ~ஆலங்காயம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றியக்குழு  தலைவா் சங்கீதாபாரி, துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல் உள்ளிட்டோா
உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தலைவா் பூசாராணி உள்ளிட்டோா். ~ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவா் சங்கீதாபாரி, துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல் உள்ளிட்டோா

வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரத்தில் பொங்கல் விழா

Published on

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜி கணேசன் தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராமன், நகராட்சி நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா். இதில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் மண்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், உறுப்பினருமான செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ், எழுத்தா் குமாா், பாதிரியாா் அந்தோணிமாறன் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஊழியா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா். ஆலங்காயம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்கள், பொது மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனா்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்துரை, சூரவேல் முன்னிலை வகித்தனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நிா்வாக மேலாளா் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com