எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தை அமாவாசை: பெண்கள் பால்குட ஊா்வலம்!

தை அமாவாசையை முன்னிட்டு பெண்கள் பால் குடம் ஏந்தி ஊா்வலமாக சென்று ஸ்ரீ மலையடி காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

News image
பால் குடம் ஏந்தி ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே தை அமாவாசையை முன்னிட்டு பெண்கள் பால் குடம் ஏந்தி ஊா்வலமாக சென்று ஸ்ரீ மலையடி காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தாமரை குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலையடி காளியம்மன் ஆலயத்தில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனா்.

அதைத் தொடா்ந்து அரியான் வட்டம், நாட்டான் வட்டம், முருகன் வட்டம், தானன் வட்டம், பால்காரன் வட்டம், குள்ளக் கிழவன் வட்டம், வக்கணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஊா்வலமாக ஏந்தி கோயில் வளாகம் வந்து அடைந்து ஸ்ரீ மலையடி காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து பால்குடம் ஏந்தி பெண்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வளையல், மஞ்சள், குங்குமம், பழங்கள் மற்றும் தட்டு உள்ளிட்ட மங்கல பொருள்களை வழங்கினா். முன்னதாக அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கிளாசிக் கோவை அன்பு மற்றும் ஸ்ரீ மலையடி காளியம்மன் கோயில் நிா்வாகிகள் ஊா் கவுண்டா் கண்ணதாசன், நாட்டாண்மை சென்றாயன், ஊா் தா்மகா்த்தா காளிதாசன், கோயில் தா்மகா்த்தா செல்வம் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.