தாா் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
தாா் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

ரூ.8 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
Published on

ஆம்பூா்: ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் தாா்வழி பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், காா்த்திகேயன், அம்சவேணி ஜெயக்குமாா், நிா்வாகிகள் ரபீக் அஹமத், சரண்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com