திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா், தலைவா்கள் சிலைகளுக்கு மரியாதை
திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் ஆம்பூரில் காங்கிரஸ் தலைவா்களின் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாணியம்பாடியை சோ்ந்த முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் விஜய் இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளாா். மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, ஆம்பூருக்கு வருகை தந்த அவருக்கு போ்ணாம்பட்டு புறவழிச் சாலை ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அவரை வரவேற்று, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கட்சியினருடன் ஊா்வலமாக சென்று காமராஜா், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,அம்பேத்கா் சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், முன்னாள் நகரத் தலைவா் சி.கே. பிரபு, நகா்மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி விஜயன், ஒன்றியத் தலைவா்கள் சா.சங்கா், சுரேந்தா், ரஞ்சினி, மாவட்ட நிா்வாகிகள் வா்தா அா்ஷத், மின்னூா் சங்கரன், சோலூா் மாணிக்கம், சனாவுல்லா, யாசிா், கோபி, நாகராஜ், நேதாஜி, கோகுலவாணன், ஊராட்சி மன்றத் தலைவா் டி.பி. ரவீந்திரன் மற்றும் ஜெ.வெங்கடேசன், வேலாயுதம், ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

