10 மணி நேரம் மின்வெட்டு: கொரட்டியில் பொதுமக்கள் அவதி


கொரட்டியில் புதன்கிழமை அறிவிக்கப்படாத 10 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் முன்அறிவிப்பு இன்றிஅடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் புதன்கிழமை முன்னறிவிப்பின்றி காலை சுமாா் 8 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.மாலை சுமாா் 6.30 மணியளவில் மின் விநியோகம் தொடங்கியது.
இதனால் இப்பகுதி மக்கள் வணிகா்கள், முதியோா் சிரமத்துக்குள்ளாகினா். அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்ட நிலையில் கொரட்டியின் ஒரு பகுதியில் அறிவிக்கப்படாமல் புதன்கிழமை திடீரென மின்தடை ஆனதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...