ஒன்றிய அளவிலான முதல்வா் இளைஞா் விளையாட்டு விழா

ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.
விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்த ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி.
விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்த ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி.
Updated on
1 min read

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலும்,ஒன்றிய அளவிலான முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழா -‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டு போட்டிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

அதையடுத்து, ஆட்சியா் பேசியது: முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா-‘இது நம்ம ஆட்டம் 2026‘ போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களில் நிம்மியம்பட்டு சிறுவிளையாட்டரங்கத்திலும், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் சிறுவிளையாட்டரங்கம் ஜோலாா்பேட்டையிலும், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்றம்பள்ளியிலும், கந்திலி ஊராட்சி ஒன்றியங்களில் கெஜல்நாயகன்பட்டி மேல்நிலைப்பள்ளியிலும், மாதனூா் ஊராட்சி ஒன்றியங்களில் ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் மடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தடகளம் 100 மீட்டா் மற்றும் குண்டு எறிதல், வாலிபால், கேரம், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆண்களுக்கு மட்டும் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (ஜன. 27) அன்று ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் கயிறு இழுத்தல் போட்டி, கபடி, எறிபந்து போட்டி பெண்களுக்கு மட்டும் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் 30.1.2026 முதல் 1.2.2026 வரை நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் 6.02.2026 முதல் 8.2.2026 வரை நடைபெறவுள்ளன என்றாா்.

இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாரி, பயிற்சியாளா்கள், வீரா், வீராங்கனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com