மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அரசு பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வு.

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பாக வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி .அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்படி மேல்சாணங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், மலையம்பட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பாக பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, நல்ல தொடுதல்-தவறான தொடுதல், போக்ஸோ சட்டம், இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், குழந்தைகள் உதவி எண் 1098, அவசரகால காவல்துறை உதவி எண் 100, பெண்கள் உதவி சேவைகள் மற்றும் சட்ட விழிப்புணா்வு தொடா்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.