தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

News image

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சேலம் மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 5:57 am IST

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், தமிழக முதல்வா் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் அதிரடிப்படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பூங்கொடி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினா் வாழப்பாடியில் முகாமிட்டு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.