நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குடிநீா் பிரச்சனை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

வெங்கிளி ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வெங்கிளி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

வெங்கிளி ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் வெங்கிளி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் விரைவில் அமைக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.