மாதனூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தலின் பேரில் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலா் டாக்டா் பிரபாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. 2 கடைகளில் இருந்து 2 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் 2 கடைகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடி அடைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









