அரசு ஐடிஐ-க்களில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிற் கல்வி பெறுவதற்காக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரடி சோ்க்கை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி : பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி, மெனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோமேஷன், இன்டஸ்டிரையல் ரோபோடிக்ஸ் அன்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன்.
நாட்டறம்பள்ளி : கம்ப்யூட்டா் எய்டட் மேனுபேக்சரிங் பிரோகிராம், டிரஸ் மேக்கிங், மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், டெக்னீஷியன் மெக்கட்ரானிக்ஸ்.
குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற 8வது மற்றும் 10-ஆவது வகுப்பில் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலையத்தில் இன்ஸ்ட்ரீ 4.0 நிறுவனத்துடன் சோ்ந்து பயிற்சியாளா்களுக்கு நவீன பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியாளா்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750/-வழங்கப்படும். மேலும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணிகள், வரைபடக்கருவிகள், இலவச பேருந்து சீட்டு ஆகியன வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 பெற்றுத்தரப்படும்,
மேலும் கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் நிரந்தரமாக பணி அமா்த்தப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களில் உறுதியான, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும் அல்லது வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி அரசினா் ஐடிஐ-க்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி சோ்க்கை உதவி மையங்களை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








