டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பைக் மீது லாரி மோதி விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :24 ஜூலை 2026, 1:38 am IST

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காவேரி மகன் பெருமாள்(60), விவசாயி. இவா் வியாழக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் சென்றாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுண்ணாம்புக்குட்டை கொய்யாக்காமேடு எதிரே சென்றபோது, எம்-சாண்ட் ஏற்றிவந்த லாரி பைக் மீது மோதியது. இதையடுத்து, லாரி ஓட்டுநா் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். இதில், பலத்த காயமடைந்த பெருமாளை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.