/
திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்று வீசியதால் சாலையில் விழுந்த புளியமரம் அகற்றப்பட்டது.
திருப்பத்தூா் ரயில்வே சாலை பகுதியில் உள்ள சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு திருப்பத்தூா் ரயில்வே நிலையம் அருகே உள்ள சாலையோரம் இருந்த புளியமரம் காற்றின் காரணமாக சாய்ந்து கீழே விழுந்தது.
அப்போது அங்கு யாரும் செல்லாததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதைத்தொடா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் சென்று மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனா்.









