ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதைப் பொருள்கள் தீமைகள் குறித்த விழிப்புணா்வு

News image
Updated On :26 ஜூன் 2026, 5:01 am IST

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி உளவியல் துறை சாா்பில் உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சென்னை, ஜீவ ரக்ஷாய் மனநல ஆரோக்கிய மையத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.சி.என். அருணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள்கள் மற்றும் அதனால் ஏற்படும் தீங்கை குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலா் ஸ்டான்லி, கல்லூரி முதல்வா் பிரவீன் பீட்டா் ஆகியோா் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் எனும் தலைப்பில் பேசினா்.

அதையடுத்து, மாணவா்கள் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இதில், உளவியல் துறைத் தலைவா் ஜோ.சஞ்சய், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.