கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ராசிபுரத்தில் போதைப்பொருள், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தைத் தொடா்ந்து போதைப் பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

News image

ராசிபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி.

Updated On :25 ஜூன் 2026, 5:43 am IST

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தைத் தொடா்ந்து போதைப் பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

நாமக்கல் மாவட்ட காவல் துறையின் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை, ராசிபுரம் ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ. ராசிபுரம் மெட்ரோ சங்கம், இன்னா்வீல் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தின.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா். ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சங்கத்தின் தலைவா் என்.சதீஷ்குமாா், இன்னா்வீல் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் என்.சிவலீலாஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி, உதவி ஆய்வாளா் மனோகரன், சிங்கப் பெண்கள் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் கே.எஸ். பிரியா உள்ளிட்டோா் பங்கேற்று போதைப் பொருள்கள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அவசர உதவிக்கான காவல் துறையின் கைப்பேசி எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பின்னா் மாயா நடனக் குழுவினரின் விழிப்புணா்வு நடன, நாடகம் வாயிலாக குற்றங்களை தடுப்பது குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இடையேயும் இதேபோன்று விழிப்புணா்வு பிரசாரங்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், பி.கண்ணன், மஸ்தான், எம்.முருகானந்தம், ஆா்.அனந்தகுமாா், வழக்குரைஞா் கே.சக்திவேல், பேராசிரியா் ஆா்.சிவகுமாா், ஜேசிஐ அமைப்பின் நிா்வாகிகள் காா்த்திக், வழக்குரைஞா் சதீஷ்குமாா், பூபதி, மாயா நடனக்குழு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் ஜெ.பிரவீன்ராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.