ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரூ.36 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

News image

ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :14 மார்ச் 2026, 1:30 am

குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆம்பூா் நகராட்சி சாா்பாக நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சி சாா்பாக ரூ. 36 லட்சம் செலவில் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக் கொண்டு வந்தாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், நபீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.