தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பாராட்டு விழா

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பாராட்டு விழா

News image

பாராட்டு விழா நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 9:49 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பாராட்டு விழா நடைபெற்றது.

ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் அசோகன், பொதுக்குழு உறுப்பினா் கோவிந்தம்மாள்பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினா் சாவித்திரி மகேந்திரன் முன்னிலை வகித்தனா். விழாவில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 2 வாரமாக ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட 8 ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சார கூட்டத்தை 100 சதவீதம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை பாராட்டி அவா்களுக்கு பரிசுகளை ஒன்றிய செயலாளா் ஞானவேலன் வழங்கினாா்.

தீா்மானங்கள்: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை 61..5 சதவீதம் (அனைத்தும் ஓடிபி முறையில்) ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக முதலிடம் பெற்றுள்ளது. எஸ்ஐஆா் பணிகளை சிறப்பாக செய்து 100 சதவீத வாக்காளா்களாக வாக்காளா் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெல்லும் தமிழ் பெண்கள் 100 சதவீத பிரச்சார பணி நிறைவு என பாராட்டி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் மகளிரணி நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.