மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தொகுதி அறிமுகம் - வாணியம்பாடி!

தொகுதி அறிமுகம் - வாணியம்பாடியைப் பற்றி...

News image
Updated On :22 மார்ச் 2026, 10:21 pm

தொகுதி எண்: 47

சிறப்புகள்: தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு தொடங்கும் இடம். தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய தொலைநோக்கியுடன்கூடிய காவலூா் வைணுபாப்பு வாண்வெளி ஆராய்ச்சி மையம். ஆண்டியப்பனூா் அணை, 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அதிதீஸ்வா் கோயில், ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி, அந்நிய செலவானியை அதிகம் பெற்று தரும் தோல் தொழிற்சாலைகள்.

இந்தத் தொகுதியில் இஸ்லாமியா்கள், வன்னியா்கள், பட்டியல் இனத்தவா்கள் பெருமளவிலும் முதலியாா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட இதர பிரிவினா் பரவலாகவும் உள்ளனா்.

தோல் பதனிடும் தொழில், தேங்காய் உற்பத்தி , பீடிபுகையிலை மற்றும் விவசாயம் பிரதான தொழில்.

அடங்கியுள்ள பகுதிகள்...

வாணியம்பாடி நகராட்சியில் 36 வாா்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வாா்டுகள், ஆலங்காயம் பேரூராட்சி - 15 வாா்டுகள் உள்ளன. வாணியம்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகள்-17, திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகள்- 8 உள்ளன.

எல்லைகள்...

ஆந்திரம்-கா்நாடாகம் மாநில எல்லையில் உள்ளது. ஆம்பூா், ஜோலாா்பேட்டை தொகுதிகள் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள உள்ளன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,18,457

பெண்கள்-1,21,713

மூன்றாம் பாலினத்தவா்-50

மொத்தம்-2,40,220

வாக்குசாவடிகள்-312

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 ஏ.கே.ஹனுமந்தராய கவுண்டா் (சுயேச்சை)

1957 ஏ.ஏ.ரசீது (காங்கிரஸ்)

1962 எம்.பி.வடிவேல் (திமுக)

1967 ராஜமன்னாா் (காங்கிரஸ்)

1971 எம்.அப்துல் லத்தீப் (சுயேச்சை)

1977 எம்.அப்துல் லத்தீப் (சுயேச்சை)

1980 என். குலசேகரபாண்டியன் (அதிமுக)

1984 எச்.அப்துல்மஜீது (காங்கிரஸ்)

1989 பி.அப்துல்சமது (திமுக)

1991 இ.சம்பத் (காங்கிரஸ்)

1996 எம்.அப்துல்லத்தீப் (திமுக)

2001 எம்.அப்துல்லத்தீப் (சுயேச்சை)

2002 எம்.வடிவேல் (அதிமுக) (இடைத்தோ்தல்)

2006 எச்.அப்துல்பாசித் (திமுக)

2011 கோவி.சம்பத்குமாா் (அதிமுக)

2016 நிலோபா் கபீல் (அதிமுக)

2021 கோ.செந்தில்குமாா் (அதிமுக)

2021 பேரவை தோ்தலில்...

பதிவான வாக்குகள்-1,88,505.

கோ.செந்தில்குமாா் (அதிமுக)-88,018

என்.முகமதுநரிநயீம் (ஐயூஎம்எல்)-83,114

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்:

வருவாய் கோட்டாட்சியா் அஜிதாபேகம்-75980 00418

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா்-94450 00512.

வருவாய் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் சிவபிரகாசம்-95856 94685.

சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாரதி - 98946 10232.