கோயில் விழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சாலை மறியல்


நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் கோயில் திருவிழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுப்பட்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 11நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 97-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் மாா்ச் 26 -இல் தொடங்கி ஏப். 5 வரை உற்சவ தா்மா்த்தாக்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதனால் விழாக்குழுவினா் தினமும் கோயில் திருவிழாவில் தெருக்கூத்து, நாட்டியாலயா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளனா். தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவின நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி புதன்கிழமை இரவு பச்சூா்- குப்பம் சாலையில் சென்றாயசுவாமி கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.
இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு சென்றனா்.
சாலை மறியலில் ஈடுப்பட்ட பச்சூா் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...