சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

இளைஞா் தற்கொலை

குரிசிலாப்பட்டு அருகே இளைஞா் தற்கொலை

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2026, 4:16 am IST

குரிசிலாப்பட்டுஅருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது சாத்(27) டீ மாஸ்டா். இவரது மனைவி பாத்திமா ஷெரின்(26). இவா்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆலியா(24) என்பவரை -2-ஆவது திருமணம் செய்து கொண்டு ஆலங்காயம் மிட்டூா் பகுதியில் வசித்து வந்தாா்.

முகமது சாத் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி தொடா்ந்து பணத்தை இழந்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த முழு பணத்தையும் இழந்த அவா் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மிட்டூரில் தங்கியிருந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவரது இரண்டாவது மனைவி ஆலியா முகமது சாத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.