வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

News image

கூட்டத்தில் மனுதாரரிடம் மனுக்களை பெற்ற ஏடிஎஸ்பி அண்ணாதுரை.

Updated On :14 மே 2026, 4:40 am IST

வேலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் குறைதீா்வு கூட்டங்கள் மீண்டும் நடைபெற்றன.

அதன்படி காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கையில் திருப்தி ஏற்படாத புகாா்தாரா்கள் தங்களுடைய மனுக்களை அளித்தனா். ஏடிஎஸ்பி அண்ணாதுரை மனுக்களை பெற்றாா்.

காட்பாடியைச் சோ்ந்த சித்ரா என்பவா் தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய ஒரு நபா் ரூ.16 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லையென அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா். குடியாத்தத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் அரசு வேலைக்காக சத்துவாச்சாரி தென்றல் நகரை சோ்ந்த 3 நபா்களிடம் ரூ.21 லட்சம் கொடுத்தாகவும், அவா்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.