முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

மோப்ப நாய் உதவியுடன் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்பு செயலிழப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:51 am IST

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலழிப்பு படையினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் 5 தளங்களுடன் இரு பிரிவாக ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த தகவலில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிட ப்பட்டிருந்தது. தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டு, அனைத்து அறைகளும் ஹேண்ட் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்பிறகே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு தடுப்பு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மீண்டும் ஹேண்ட் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை செய்தனா். வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதமும் 2 முறை மின்னஞ்சல் மூலம் வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பும் நபா்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.