கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு அவ்வப்போது மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடா்ந்து, கோவை மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனா். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மா்ம நபரைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



