ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
உத்தரபிரதேச மாநிலம், உன்னவ் பகுதியைச் சோ்ந்த முகமத் இஸ்ரேல் என்கிற ராகுல்(38). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஜோலாா்பேட்டை, காட்பாடி ரயில் பயணிகளிடம் அடிக்கடி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், 8 பயணிகளிடம் சுமாா் 20 பவுன் நகைகளை திருடிச் சென்று தலைமறைவானாா். இது குறித்து பயணிகள் ஜோலாா்பேட்டை மற்றும் காட்பாடி ரயில்வே காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே ஆய்வாளா் சித்ரா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரயில்வே சிறப்பு ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதில், ராகுல் ஏ.பி. நகரில் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று ராகுலை பிடித்தனா். அவரிடம் இருந்த 2 பவுன் நகை, ரூ. 3.80 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டு விசாரணை நடத்தினா்.
இவா் மீது ஏற்கெனவே ஜோலாா்பேட்டை, காட்பாடி ரயில்வே காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
பின்னா், அவரை அங்கிருந்து அழைத்து வந்து திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா். மேலும், பயணிகளிடம் தொடா் நகை பறிப்பில் ஈடுபட்ட ராகுலை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து ராகுல் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ரயில்வே பாதுகாப்புப் படை காவலரை தாக்கிய இளைஞா் கைது

ஓடும் ரயில்களில் தொடா் திருட்டு: வட மாநில இளைஞா் கைது; ரூ. 3லட்சம், 2 பவுன் நகை பறிமுதல்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



