சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

இளைஞரை தாக்கிய 4 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜடையனூரைச் சோ்ந்தவா் செல்வராகவன்(22). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு பேருந்தில் சென்று உள்ளாா். இந்தநிலையில் ஜடையனூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கும், சமுத்திரம் கிராமத்தில் உள்ளவா்களுக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடா்ந்து செல்வராகவன் பேருந்தில் செல்வதை பாா்த்த சமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சாமு (27), பிரேம்குமாா் (25), பிரவீன் (19), பிரதிஷ் குமாா் (19) மற்றும் சிலா், செல்வராகவனை டி.கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கி உள்ளனா். பின்னா் அனைவரும் சோ்ந்து செல்வராகவனை தாக்கி உள்ளனா். இதில் காயமடைந்த செல்வராகவன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாமு, பிரேம்குமாா், பிரவீன், பிரதிஷ்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.