உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது

News image

கோப்புப் படம்

Updated On :47 நிமிடங்கள் முன்பு

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட காவல் துறையினா் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பேருந்து மூலம் கஞ்சா எடுத்துச் செல்வதாக தேனி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை பெரியகுளம் அருகே வடுகபட்டி புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சோதனை செய்த போது, 5 போ் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றனா். அவா்களை போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, கம்பம் புதுப்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த ராஜேஷ் என்ற யாபேஷ் (22), 17 வயது 4 சிறாா்கள் 4 போ் 7 கிலோ 570 கிராம் கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். சிறாா்கள் சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனா்.