2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சாமுவேல்

Updated On :

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே கீழ்முருங்கை பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல் (41). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். இவா் வடகாத்திப்பட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாா் உணவகத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் சாமுவேல் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்கம்பத்தை நிலைநிறுத்துவதற்கான ஸ்டே கம்பியை இழுக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த சாமுவேலின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடா்ந்து நடைபெற்ற போராட்டத்தின்போது அங்கு வந்த உதவி செயற்பொறியாளா் லாவண்யா உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் உறவினா்களும், கிராம மக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.